தண்ணீர் அருந்துவதன் பலன்கள்
தண்ணீர் அருந்துவது மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தண்ணீரை எப்போது அருந்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
* காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதால், உடலின் உள்ளுறுப்புகள் அனைத்தும் புத்துணர்ச்சி பெறும்.
* குளிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, ரத்த அழுத்தம் குறைய உதவி புரியும்.
* சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, செரிமான சக்தியை அதிகரிக்கும். சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
* நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் 90 சதவீத நோயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
* தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகினால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு நோய்கள் வராமல் தடுக்க இயலும்.