உலகிலேயே முதன்முறையாக ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் ரெயில்
அல்ஸ்டாம் நிறுவனம், எல்பே-வெசர் ரயில்வே ஆகியவை இணைந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்யாத ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் ரயில்களை உருவாக்கியுள்ளன.
உலகிலேயே முதன்முறையாக ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் ரெயில் ஜெர்மனியில் உள்ளது. இந்த ெரயில்கள் மூலம் ஆண்டுக்கு 1.6 மில்லியன் லிட்டர் டீசலை சேமிக்க முடியும். இவற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கி.மீ ஆகும்.
இன்றுவரை, எத்தியோப்பியா அதன் பழங்கால நாட்காட்டியைப் பயன்படுத்துகிறது. ஒரு எத்தியோப்பியன் ஆண்டு என்பது 13 மாதங்களைக் கொண்டது.
இந்தியாவில் நீருக்கு அடியில் ஓடும் முதல் மெட்ரோ ரெயிலானது கொல்கத்தாவில் இந்த ஆண்டு முதல் இயக்கப்பட உள்ளது.
துணியில் செய்தித்தாள் அச்சிட்டு வெளியிடும் நாடு `ஸ்பெயின்' ஆகும்.
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மேலாண்மை கப்பல் `மேப்ளவர் 400' ஆகும். இது நீர்வாழ் பாலூட்டிகளைக் கண்காணிக்கவும், கடல் மாசுபாட்டை ஆய்வு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.