நாடுகளுக்குள் வேளாண் பொருள் உற்பத்தியில் ஏற்படும் வேறுபாடுகள்

வணிகமயமாகிவிட்ட இன்றைய வேளாண் சூழலில் விளைச்சல் கணக்கு முதன்மையாகிறது.

Update: 2023-09-28 16:21 GMT

வேளாண்மையில் முன்பெல்லாம் தேவைக்கான உற்பத்தி என்றிருந்தபோது, தனக்கும் தனது அண்டைச் சமூகத்துக்கும் தேவையான உற்பத்தி நடந்தால் போதுமானது என்ற பார்வையே இருந்தது. ஆனால், வணிகமயமாகிவிட்ட இன்றைய வேளாண் சூழலில் விளைச்சல் கணக்கு முதன்மையாகிறது. இதை உற்பத்தித்திறன் என குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட இடத்தில் அதிகபட்ச விளைச்சல் எடுப்பவர், சிறந்த உற்பத்தியாளர் யார்? என்பது ஒரு வகையான ஒப்பீட்டு கணக்காகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் ஒரு மாவட்ட உழவர்களின் விளைச்சலையும் மற்றொரு மாவட்ட விவசாயிகளின் விளைச்சலையும் ஒப்பிட்டு, அதில் ஒரு மாவட்ட விவசாயிகளின் உற்பத்தி அதிகமாக உள்ளதாக இருந்தால், அவர்களுடைய உற்பத்தித்திறன் அதிகம் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அதேபோல விளைச்சலை நாட்டுக்கு நாடு ஒப்பிட்டுக்கொள்கின்றனர். இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் வெளியிடுபவர்கள் உணவு, வேளாண்மை நிறுவனத்தினர். ஆகவே, இதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு நம்முடைய வேளாண்மை பிற்போக்கானது என்று கூறுபவர்களும் உண்டு.

உண்மையில் உற்பத்தித்திறன் எது என்பது, இவர்கள் கூறும் அளவுகோல்களை வைத்துப் பார்த்தால் மேற்கண்டவாறே தோன்றும். ஆனால், இது ஒரு குறையுடைய பார்வை. உற்பத்தித் திறனை அதாவது உண்மையான உற்பத்தித் திறனை, நீடித்த உற்பத்தித் திறனை அளவிட வேறு சில அளவீடுகளும் தேவைப்படுகின்றன. மக்கள் உடல் நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது முக்கியமானது. ஆனால் ரசாயன, எந்திர வேளாண்மை ஆதரவாளர்கள் அதுபோன்ற அளவீடுகளை கணக்கில் எடுப்பதில்லை. அதாவது, ஓர் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும்போது எவ்வளவு ஆற்றலை உள்ளீடு செய்கிறீர்கள், எவ்வளவு ஆற்றலை அதிலிருந்து திரும்பப் பெறுகிறீர்கள்? என்பது முதன்மையானது. அப்படியான கணக்கில் பார்த்தால் சீனாவும், அமெரிக்காவும் மட்டுமல்ல ரசாயன ஆதரவாளர்களும் அதல பாதாளத்தில் போய் விழுந்துவிடுவார்கள் என்று இந்திய வேளாண் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்