செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் ராட்சத நத்தை

ஊர்வன வகையை சேர்ந்த நந்தையில், மிக பெரிய இனமாக இருப்பது, ‘லிசாசாட்டினா புலிகா’ என்ற நில நத்தை இனமாகும். இந்த ராட்சத நத்தை இனம், கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது.

Update: 2023-06-20 15:25 GMT

ஆனால் தற்போது இந்த இனம், கென்யா, தான்சானியா, பசிபிக் தீவுகள், தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா மற்றும் கரீபியன உள்பட உலகில் பல்வேறு பகுதிகளிலும் ஈரப்பதமான வெப்ப மண்டலத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்து காணப்படுகின்றன. இந்த ராட்சத நத்தை அதிகபட்சமாக 10 செ.மீ. நீளம் வரை வளரும். வயது வந்த நந்தை சுமார் 8 செ.மீ. நீளம் கொண்டதாக இருக்கும்.

உலகின் முதல் 100 ஆக்கிரமிப்பு இனங்களில் ஒன்றாக இந்த நத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. இதனை பல நாடுகள் தடை செய்திருக்கின்றன. உலகின் சில நாடுகள், இவற்றின் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி யிருக்கின்றன. அதற்கு காரணம், இந்த ராட்சத நத்தை இனம், மனிதனி வாழ்வாதாரத்திற்குரிய தாவரங்களையும், பயிர்களையும் தின்றொழிக்கும் தன்மை கொண்டவை. இந்த ராட்சத நத்தையானது, தாவரங்கள்,பழங்கள், காய்கறிகள், பூஞ்சைகள், காகிதம், அட்டை பலகைகளை உணவாக உட்கொள்கிறது. மேலும் அரிதாக தன் இனத்தையே அழிக்கும் வகையில் தங்களின் முட்டைகளையும், எலிகள், பறவைகள் போன்ற இறந்து போன சிறிய விலங்கு களையும் கூட சாப்பிடுகின்றன.

இந்த நத்தைகளை விவசாய பகுதிகள், கடலோர பகுதிகள், இயற்கை காடுகள், நடப்பட்ட காடுகள், நீர்நிலைகளின் கரையோர பகுதிகள், புதர்கள் மற்றும் புதர் நிலங்கள், நகர்ப்புறங்கள் மற்றும் ஈர நிலங்களில் காணலாம். தாவர பயிர்களை நாசம் செய்யும் இந்த ராட்சத நத்தைகளை, செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். உலகில் பல பகுதிகளுக்கு இவை செல்லப்பிராணிகளாக விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு தைவான், சீனா உள்ளிட்ட நாடுகளில் இவை உணவுக்காகவும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்