பாரா ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்

பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நவ்தீப் சிங் தங்கப்பதக்கம் வென்றார்.;

Update:2024-09-08 01:09 IST

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது.

இதில் இந்திய வீரர் நவ்தீப் சிங் பங்கேற்றார். இப்போட்டியில் ஈரான் வீரர் பெயிட் சட்ஹித் 47.64 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதல் இடம் பிடித்தார். இந்திய வீரர் நவ்தீப் சிங் 47.32 மீட்டர் தூரம் வீசி 2ம் இடம் பிடித்தார்.

ஆனால், முதல் இடம் பிடித்த வீரர் பெயிட் சட்ஹித் போட்டி விதிகளை மீறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், நவ்தீப் சிங் தங்கப்பதக்கம் வென்றார் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்