பாராஒலிம்பிக்: வெள்ளி பதக்கம் வென்று அசத்திய இந்திய வீரர் நிஷாத் குமார்

இவர் கடந்த டோக்கியோ பாராஒலிம்பிக்கிலும் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.;

Update:2024-09-02 09:50 IST

image courtesy: twitter/@Media_SAI

பாரீஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.04 மீ தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் கடந்த டோக்கியோ பாராஒலிம்பிக்கிலும் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2.12 மீ உயரம் தாண்டிய அமெரிக்க வீரர் தங்கப்பதக்கத்தையும், 2 மீ தாண்டிய ரஷிய வீரர் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.

இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து 27-வது இடத்தை பிடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்