பாரா ஒலிம்பிக் வில்வித்தை இறுதிப்போட்டியில் ஹர்வீந்தர் சிங் வெற்றி - இந்தியாவுக்கு 4-வது தங்கம்

பாரா ஒலிம்பிக் வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

Update: 2024-09-04 19:08 GMT

Image Courtesy : @Paralympics

பாரீஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆண்கள் வில்வித்தை இறுதிப்போட்டியில் போலந்து வீரர் லூகாஸ் சிசெக்கை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங் வெற்றி பெற்றார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை ஹர்வீந்தர் சிங் படைத்துள்ளார்.

அதோடு, 2024 பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Full View


Tags:    

மேலும் செய்திகள்