உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்..அர்ஜென்டினா வெற்றி

அர்ஜென்டினா அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது

Update: 2024-10-16 02:15 GMT

Image : @Argentina

பியூனஸ் அயர்ஸ்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும்.

தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்றன. இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா - பொலிவியா அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது . இதனால் ஆட்ட நேர முடிவில் 6-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது . அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அல்வாரஸ் , மார்டினஸ் , தியாகோ ஆகியோரும் கோல் அடித்தனர் . 

Tags:    

மேலும் செய்திகள்