ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஒடிசாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற கோவா

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி - பெங்களூரு எப்.சி அணிகள் மோத உள்ளன.;

Update: 2025-01-04 13:53 GMT

Image Courtesy: @FCGoaOfficial / @IndSuperLeague

மும்பை,

13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் மாலை 5 மணிக்கு புவனேஸ்வரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி - எப்.சி. கோவா அணிகள் மோதின.

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோவா அணி மேலும் 2 கோல்களை அடித்து அசத்தியது. இதன் மூலம் கோவா 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து ஒடிசா அணி ஒரு கோல் அடித்தது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி கோவா அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து ஜார்கண்டில் இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி - பெங்களூரு எப்.சி அணிகள் மோத உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்