ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: பஞ்சாபை வீழ்த்திய கேரளா பிளாஸ்டர்ஸ்

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.;

Update:2025-01-05 21:42 IST

image courtesy; @IndSuperLeague / @KeralaBlasters

புதுடெல்லி,

13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி அணிகள் மோதின.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேரளா அணி முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

இறுதியில் இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் எப்.சி. அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்