ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஐதராபாத் அணிகள் அபார வெற்றி
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.;
கவுகாத்தி,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் மாலை 5 மணிக்கு கவுகாத்தியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முகமதின் எஸ்.சி - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 4-0 என்ற கோல் கணக்கில் முகமதின் எஸ்.சி அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.