ஐ.எஸ்.எல்.கால்பந்து ; கேரள அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி மோகன் பகான் அணி ஆதிக்கம் செலுத்தியது.
கொல்கத்தா ,
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று இரவு 7.30மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் - கேரளா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி மோகன் பகான் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணி அபார வெற்றி பெற்றது . மோகன் பகான் அணியில் ஜேமி மெக்லாரன், ஜேசன் கம்மிங்ஸ், ஆல்பர்டோ ரோட்ரிக்ஸ் ஆகியோர் கோல் அடித்தனர் . கேரள அணியில் ஜிமினேஷ், மிலோஸ் ஆகியோர் கோல் அடித்தனர் .