உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்ற சவுதி அரேபியா

பிபா தலைமையகத்தில் நேற்று நிர்வாக கமிட்டியினர் ஆலோசித்தனர்.;

Update:2024-12-12 01:04 IST

சூரிச்,

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. கடைசியாக 2022ல் கத்தாரில் நடந்த உலகக் கோப்பை தொடரில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து 2026-ல் அமெரிக்கா , மெக்சிகோ , கனடா ஆகிய நாடுகளில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் என ஏற்கனேவே அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் 2030 மற்றும் 2034-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை எந்த நாட்டுக்கு வழங்குவது என்பது குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள பிபா தலைமையகத்தில் நேற்று 'பிபா' நிர்வாக கமிட்டியினர் ஆலோசித்தனர்.

இதன் முடிவில் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு ஸ்பெயின், போர்ச்சுக்கல், மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டது. 

சவுதிஅரேபியாவுக்கு 2034-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சவுதிஅரேபியா உலகக் கோப்பை போட்டியை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்