ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் எப்.சி - ஐதராபாத் எப்.சி அணிகள் இன்று மோதல்

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.;

Update: 2024-10-21 02:02 GMT

கோப்புப்படம்

ஜார்க்கண்ட்,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று ஜார்க்கண்ட்டில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி - ஐதராபாத் எப்.சி அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை ஜாம்ம்ஷெட்பூர் எப்.சி அணி 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேபோல், ஐதராபாத் அணி 3 ஆட்டங்களில் ஆடி 1 டிரா, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்