ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா - நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் 'டிரா'

நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் எப்.சி. கோவா - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.;

Update:2024-10-05 06:36 IST

image courtesy: Indian Super League twitter

கோவா,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கோவாவில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் எப்.சி. கோவா - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்தன. இதையடுத்து எப்.சி. கோவா - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது. இன்றைய ஆட்டங்களில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. - ஈஸ்ட் பெங்கால் எப்.சி. (மாலை 5 மணி), மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் - முகமதன் எஸ்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்