விராட் கோலியின் பதாகையை பார்த்து கான்ஸ்டாஸ் செய்த செயல்.. வீடியோ வைரல்

இந்தியா - ஆஸ்திரேலியா 5-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.;

Update: 2025-01-03 06:05 GMT

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள இந்தியா ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது வரை 8 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்தியா 154 ரன்கள் அடித்துள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் எல்லைக்கோட்டின் அருகே ஆஸ்திரேலிய வீரர் சாம் கான்ஸ்டாஸ் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது இந்திய ரசிகர் ஒருவர் கையில் விராட் கோலியின் புகைப்படம் உள்ள பதாகையை ஏந்தி ஆரவாரம் செய்தார். அதனை கண்ட கான்ஸ்டாசும் ரசிகருடன் இணைந்து கைதட்டி ஆரவாரம் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த போட்டியில் கான்ஸ்டாஸ் - விராட் கோலி மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரின் செயல் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்