டி.என்.பி.எல் : நெல்லை அணிக்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருப்பூர்

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு திருப்பூர் அணி 189 ரன்கள் எடுத்தது.;

Update:2024-07-24 21:13 IST

நெல்லை,

8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந்தேதி சேலத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் நடைபெற்றது. தற்போது நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் 3-வது கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, திருப்பூர் அணி முதலில் செய்தது.

தொடக்கம் முதல் திருப்பூர் அணி சிறப்பாக விளையாடியது. நெல்லை அணியின் பந்துவீச்சை திருப்பூர் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு திருப்பூர் அணி 189 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் ராதாகிருஷ்ணன் அரைசதம் அடித்தார்.மேலும் துஷார் ரெஜா 41 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து 190 ரன்கள் இலக்குடன் நெல்லை அணி விளையாடுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்