கம்பீரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்... - அவேஷ் கான் பேட்டி

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-07-13 06:54 GMT

Image : BCCI 

புதுடெல்லி,

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் வெற்றி பெற்ற பின் சீனியர் வீரர்களான ரோகித், விராட், ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இந்த தொடருடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய அணியின் இலங்கை தொடருக்கு முன் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கம்பீர் குறித்து அவரது பயிற்சியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் விளையாடிய அவேஷ் கான் கூறியதாவது, கம்பீரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் எதிராளியை வீழ்த்த, நீங்கள் அதற்காக 100 சதவீதம் கொடுப்பதற்கு எப்பொழுதும் சரியான மனநிலையுடன் இருக்க வேண்டும் என்பதுதான்.

அணிக் கூட்டங்களிலும், ஒருவரை ஒருவரை சந்தித்துக் கொள்ளும் பொழுதும் கம்பீர் மிகக் குறைவாகப் பேசுவார். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தனது கருத்தை கூறுவார். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வேலைகளையும் அவர்களுக்கான ரோல்களையும் கொடுப்பார்.

அவர் எப்பொழுதும் வெற்றி பெற விரும்புவார். அவர் எப்பொழுதும் டீம் பயிற்சியாளராக இருந்து வருகிறார். மேலும் அனைவரும் தங்களது 100 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று நினைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்