போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்த டென்னிஸ் வீரர்.. பரபரப்பு சம்பவம்

இவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-12-03 07:53 GMT

image courtesy: AFP

துனிஸ்,

துருக்கியை சேர்ந்த டென்னிஸ் வீரர் அல்டக் செலிக்பிலெக் (வயது 28). இவர் துனிசியாவில் நடைபெற்ற ஐடிஎப் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் யாங்கி எரெல் உடன் மோதினார். இந்த ஆட்டம் நேற்று நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கி முதல் செட் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், திடீரென்று அல்டக் செலிக்பிலெக் மைதானத்தில் மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அவருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வெளியான முதற்கட்ட தகவலின் படி, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அல்டன் செலிக்பிலெக் மைதானத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்