பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜிரி லெஹெக்கா சாம்பியன்

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜிரி லெஹெக்கா, ரைய்லி ஒபெல்காவுடன் மோதினார்.;

Update:2025-01-05 16:42 IST

image courtesy: AFP

பிரிஸ்பேன்,

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக்குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா, உலக தரவரிசையில் 293-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீரர் ரைய்லி ஒபெல்காவுடன் மோதினார்.

இந்த போட்டியில் லெஹாக்கா 4-1 என்ற கணக்கில் முதல் செட்டில் முன்னிலையில் இருந்தபோது, ரைய்லி ஒபெல்கா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து ஜிரி லெஹெக்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்