டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது முறை.. அரிய சாதனை நிகழ்த்திய லயன் - போலன்ட் ஜோடி

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இவர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

Update: 2024-12-29 08:07 GMT

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன.

இதனையடுத்து 105 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது. லயன் 41 ரன்களுடனும் (54 பந்துகள்), ஸ்காட் போலன்ட் 10 ரன்களுடனும் (65 பந்துகள்) களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா இதுவரை 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதில் 10-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நாதன் லயன் - ஸ்காட் போலன்ட் ஜோடி முதல் இன்னிங்சிலும் (8.3 ஓவர்கள்) 50+ பந்துகளை சந்தித்திருந்தது.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் (51 & 106 பந்துகள்) 50+ பந்துகளை சந்தித்த இரண்டாவது 10-வது விக்கெட் ஜோடி என்ற அரிய சாதனையை நாதன் லயன் - ஸ்காட் போலன்ட் நிகழ்த்தியுள்ளனர்.

இதற்கு முன்னர் 1961-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் பாகிஸ்தானின் அபாக் ஹுசைன் - ஹசீப் அஹ்சன் (56 & 109 பந்துகள்) இந்த சாதனையை படைத்தனர். தற்போது லயன் - போலன்ட் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்