கேப்டனாக பும்ரா.. ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஆஸி.கிரிக்கெட் வாரியம்

2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.;

Update: 2024-12-31 08:00 GMT

சிட்னி,

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், வர்ணனையாளர்களும், நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு சிறந்த அணிகளை தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம்.

அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் தேர்வு செய்த 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய வீரர்களை கொண்டு அணியை உருவாக்கியுள்ளது.

அதில் இந்திய வீரர்களான ஜெய்ஸ்வாலை தொடக்க ஆட்டக்காரராகவும், பும்ராவை கேப்டனாகவும் தேர்வு செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான கம்மின்சை ஒரு வீரராக கூட தேர்வு செய்யவில்லை.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்த டெஸ்ட் அணி விவரம் பின்வருமாறு:-

பும்ரா (கேப்டன்), ஜெய்ஸ்வால், பென் டக்கெட், ஜோ ரூட், ரச்சின் ரவீந்திரா, ஹாரி புரூக், கமிந்து மென்டிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மேட் ஹென்ரி, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கேஷவ் மகராஜ்.

Tags:    

மேலும் செய்திகள்