ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 157 ரன்களில் ஆல் அவுட்

ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரஷீத் கான் 25 ரன்கள் அடித்தார்.;

Update: 2025-01-03 01:08 GMT

image courtesy: twitter/@ICC

புலவாயோ,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் புலவாயோவில் நேற்று தொடங்கியது.

மழை காரணமாக சுமார் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

முதல் இன்னிங்சில் 44.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் 157 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஷீத் கான் 25 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா மற்றும் நியூமன் நியாம்ஹுரி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் அடித்துள்ளது. கும்பி 4 ரன்களுடனும், பென் கர்ரண் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்