டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த குசல் பெரேரா

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியின்போது இந்த சாதனையை படைத்துள்ளார்.;

Update: 2024-11-09 23:00 GMT

image courtesy: AFP

தம்புல்லா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி தம்புல்லாவில் நேற்று நடைபெற்றது.

இதில் 'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரேஸ்வெல், ஜகாரி போல்க்ஸ் தலா 27 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 140 ரன் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் அசலன்கா 35 ரன்களும், குசல் பெரேரா, கமிந்து மென்டிஸ் தலா 23 ரன்களும் அடித்தனர்.

குசல் பெரேரா இந்தப் போட்டியில் அடித்த 23 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 1904 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இலங்கை வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. குசால் பெரேரா: 1904 ரன்கள்

2. திலகரத்னே தில்ஷன்: 1889 ரன்கள்

3. குசல் மெண்டிஸ்: 1840 ரன்கள்

Tags:    

மேலும் செய்திகள்