ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன ரிஷப் பண்ட்

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஏலம் நடைபெறுகிறது

Update: 2024-11-24 09:46 GMT

துபாய்,

10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 577 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. ஏல நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யபடுகிறது. ஜியோ சினிமா செயலியிலும் ஏல நிகழ்ச்சியை காணலாம்.


Live Updates
2024-11-24 13:00 GMT

 டெல்லி அணியில் இருந்த ரிஷப் பண்ட் லக்னோவிற்கும், லக்னோவில் இருந்த கே.எல்.ராகுல் டெல்லிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்!

2024-11-24 12:30 GMT

கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது டெல்லி அணி. இதற்கு முன் லக்னோ அணியின் கேப்டனாக பதவி வகித்தார் ராகுல். 



 

2024-11-24 11:59 GMT

 இந்திய வீரர் முகமது சிராஜை ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி!

2024-11-24 11:55 GMT

 லியம் லிவிங்ஸ்டனை ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு அணி. இதற்கு முன் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்

2024-11-24 11:47 GMT

 யுவேந்திர சாஹலை ரூ.18 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி! 

2024-11-24 11:29 GMT

ரூ.7.50 கோடிக்கு டேவிட் மில்லரை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி! 

2024-11-24 11:24 GMT

ரூ.10 கோடிக்கு முகமது ஷமியை ஏலத்தில் எடுத்தது ஐதராபாத் அணி

2024-11-24 11:11 GMT

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி.ரூ .20.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இறுதியாக ஏலம் எடுத்த நிலையில், ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியது டெல்லி அணி. ரூ.27 கோடியாக ஏலத் தொகையை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உயர்த்திய நிலையில், அந்த தொகைக்கு டெல்லியால் ஈடு கொடுக்க முடியாததால் பண்ட்-ஐ லக்னோஅணியே ஏலத்தில் எடுத்தது . 

2024-11-24 11:10 GMT

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ . 11.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி  அணி.கடந்த சீசனில் ரூ .24.75 கோடி என்ற உச்சபட்ச விலைக்கு கொல்கத்தா அணி இவரை ஏலத்தில் எடுத்திருந்தது.

2024-11-24 10:56 GMT

இங்கிலாந்து வீரர் ஜோஷ் பட்லரை ரூ .15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்