ரிஷப் பண்ட் ரூ.25 கோடிக்கு மேல் ஐ.பி.எல்-லில் ஏலம் போவார் - சுரேஷ் ரெய்னா

18-வது ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது.

Update: 2024-11-24 06:29 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

18-வது ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தில் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ரிஷப் பண்டின் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமைகளை தவிர்த்து கேப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்தும் பண்புகளை கொண்டுள்ளார். இதனால் எந்த ஒரு அணி உரிமையாளரோ அல்லது பயிற்சியாளரோ அவரை இழக்க விரும்பமாட்டார்கள். ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக ரிஷப் பண்ட் எடுக்கப்படுவார். பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு அணிகளிடம் ரிஷப் பண்ட்டை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு தொகை இருக்கிறது.

ஏலத்தில் போட்டி நிலவும் பட்சத்தில் ரூ.25 கோடியை தாண்டி இன்னும் 4-5 கோடிகள் அதிக தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போவார். ரிஷப் பண்ட்டை எந்த அணி ஏலத்தில் எடுக்கிறதோ அந்த அணிக்காக அவர் 3 ஆண்டுகள் விளையாடுவார். சென்னை சூப்பர் கிங்சிடம் அவரை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை. ஆனால், அவர் கண்டிப்பாக பெங்களூரு அல்லது கொல்கத்தா அணியின் கேப்டனாக மாறப்போகிறார் என தெரிகிறது.

கொல்கத்தா அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் மாறும் பட்சத்தில் அந்த அணிக்கான ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயரும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணி எடுத்தது சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்