பாதுகாவலரின் தலையை பதம் பார்த்த விராட் கோலி அடித்த சிக்சர்.. வைரல் வீடியோ

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2024-11-24 09:07 GMT

பெர்த்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது வரை இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 467 ரன்கள் குவித்து 513 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 161 ரன்களிலும், கேஎல் ராகுல் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி 93 ரன்களுடனும், நிதிஷ் ரெட்டி 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் ஸ்டார்க் வீசிய பந்தில் விராட் கோலி அடித்த சிக்சர் பறந்து சென்று பவுண்டரி லைனில் உட்கார்ந்திருந்த பாதுகாவலரின் தலையில் பட்டது. இதனால் மைதானாத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியா ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர்கள் சென்று அவரை பரிசோதித்தனர். பின்னர் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்