ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான அல்லா கசன்பரை வாங்க கொல்கத்தா - பெங்களூரு அணிகள் போட்டியிட்டன. ஒரு கட்டத்தில் பெங்களூரு பின்வாங்கியது. ஆனால் கடைசி நேரத்தில் கோதாவில் குதித்த மும்பை இந்தியன்ஸ் ரூ. 4.80 கோடிக்கு அவரை தட்டி தூக்கியது.
நியூசிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசனை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு பஞ்சாப் தனதாக்கியுள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்பை ரூ. 8 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி வாங்கியுள்ளது.
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரை மும்பை ரூ. 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமாரை ஏலத்தில் எடுக்க சென்னை - பஞ்சாப் அணிகள் போட்டியிட்டன. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் ரூ. 6.50 கோடிக்கு வாங்கியது. ஆனால் டெல்லி அணி ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தி முகேஷ் குமாரை வாங்க ஆர்வம் காட்டியது. இதனால் பஞ்சாப் அவரின் ஏலத்தொகையை ரூ. 8 கோடியாக உயர்த்தியது. இருப்பினும் அதற்கும் சம்மதித்த டெல்லி அவரை மீண்டும் தனதாக்கியது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரை ஏலத்தில் எடுக்க ஆரம்பம் முதலே மும்பை - லக்னோ அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கிய பெங்களூரு ரூ.10.75 கோடிக்கு வாங்கியது.
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ஜெரால்ட் கோட்சியை ரூ.2.40 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான துஷார் தேஷ்பாண்டாவை ஏலத்தில் எடுக்க சென்னை - ராஜஸ்தான் அணிகள் போட்டி போட்டன. இறுதியில் ராஜஸ்தான் அணி ரூ. 6.50 கோடிக்கு வாங்கியது.
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லிஸ் ரூ. 2.6 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள வெளிநாட்டு வீரர்களான டோனோவன் பெரேரா (தென் ஆப்பிரிக்கா), அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா) ஆகியோர்களையும் எந்த அணியும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.