ஐ.பி.எல்.2025: சென்னை - பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

சென்னை - பெங்களூரு ஆட்டம் வருகிற 28-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.;

Update:2025-03-25 04:15 IST
ஐ.பி.எல்.2025: சென்னை - பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

image courtesy: PTI

சென்னை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் வருகிற 28-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரங்களான விராட் கோலி (பெங்களூரு) மற்றும் மகேந்திரசிங் தோனி (சென்னை) விளையாட உள்ளதால் இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1,700, முதல் ரூ.7,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்