சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
டிக்கெட் விற்பனை காலை 11 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது.;
சென்னை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து 2-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது .அதன்படி டிக்கெட் விற்பனை காலை 11 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது.
டிக்கெட் விலை ரூ.1500 -ல் இருந்து ரூ.15, 000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.