முதல் போட்டியில் ரோகித் இல்லையெனில் ஆஸ்திரேலிய தொடர் முழுவதும் அவரை கேப்டனாக்குங்கள் - கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.;

Update: 2024-11-05 06:31 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து ஒயிட்வாஷ் ஆனது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் சர்மா சொந்தக் காரணங்களுக்காக விலக உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் 3 - 0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்துள்ள இந்திய அணியை ஆஸ்திரேலியாவில் முழுமையாக ஒரு வீரர் நடத்த வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே ஒருவேளை ரோகித் சர்மா முதல் போட்டியில் விலகினால் அவரை முழுமையாக கழற்றி விட்டு ஜஸ்பிரித் பும்ராவை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கேப்டனாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஆஸ்திரேலியாவில் கேப்டன் கண்டிப்பாக தொடக்க போட்டியில் விளையாட வேண்டும். ஒருவேளை காயத்தை சந்தித்திருந்தால் அது வேறு கதை. ஆனால் முதல் போட்டியிலேயே கேப்டன் விளையாடவில்லையெனில் அது துணை கேப்டன் மீது அதிகப்படியான அழுத்தத்தை உண்டாக்கும். ரோகித் சர்மா முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் 2வது போட்டியில் விளையாடுவார் என்று செய்திகள் காணப்படுகின்றன.

ஒருவேளை அது உண்மையெனில் ரோகித் சர்மாவிடம், 'நீங்கள் ஓய்வை விரும்பினால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களை சாதாரண வீரராக மட்டுமே தேர்ந்தெடுப்போம். நீங்கள் விரும்பும் நேரத்தில் இந்திய அணியுடன் இணைந்து கொள்ளலாம்' என்றும் அவரிடம் அகர்கர் சொல்ல வேண்டும்.

ஏனெனில் 3 - 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ள இந்த நேரத்தில் தெளிவான முடிவெடுக்க வேண்டியது அவசியம். ஒருவேளை 3 - 0 என்ற கணக்கில் இந்தியா வென்றிருந்தால் இது வேறு மாதிரியாக இருந்திருக்கும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்