ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்
இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 66 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.;
சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆன இயன் ரெட்பாத் (வயது 83) வயது மூப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இயன் ரெட்பாத் 1964-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். அந்த கால கட்டங்களில் 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களுடன் 4737 ரன்கள் அடித்துள்ளார். மேலும் 5 ஒருநாள் போட்டிகளும் விளையாடியுள்ளார்.
இவரது மரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.