முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
லியாம் லிவிங்ஸ்டன் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.;
ஆன்டிகுவா,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.
இந்நிலையில்,,இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது .
ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். ஜோஸ் பட்லர் காயத்தில் இருந்து மீளாததால் லியாம் லிவிங்ஸ்டன் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.