ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்பு மிக்க காபா மைதானம் தகர்ப்பு.. எப்போது தெரியுமா..?
பிரிஸ்பேனில் புதிய மைதானம் கட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.;

image courtesy:twitter/@GabbaBrisbane
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்பு மிக்க கிரிக்கெட் மைதானங்களில் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானமும் ஒன்று. இங்கு 1931-ம் ஆண்டு முதல் இதுவரை 67 ஆண்கள் மற்றும் 2 மகளிர் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் நிறைவடைந்தவுடன் இந்த மைதானத்தை தகர்க்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பிரிஸ்பேனில் 63 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட மற்றொரு மைதானத்தை புதிதாக கட்ட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
2032-ல் ஒலிம்பிக் தொடர் பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது.