இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முன்னணி வீரரை நீக்கி அணியை அறிவித்த ஆஸ்திரேலியா
இந்தியா - ஆஸ்திரேலியா 5-வது டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது.;
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பாரடர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடர்ந்து 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் ஆடும் அணி (பிளேயிங் லெவன்) அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முன்னணி வீரரான மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக, பியூ வெப்ஸ்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
கம்மின்ஸ் (கேப்டன்), சாம் கான்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், ஸ்டீவ் சுமித், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஸ்டார்க், ஸ்காட் போலன்ட், நாதன் லயன்.