ஐ.பி.எல் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும்...- ஆட்ட நாயகன் ரூதர்போர்டு பேட்டி

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரூதர்போர்டு ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Update: 2024-06-13 12:22 GMT

image courtesy: PTI

டிரினிடாட்,

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரூதர்போர்டு 68 ரன்கள் குவித்தார்.

இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரூதர்போர்டு ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்திருந்தாலும் அங்கு கிடைத்த வசதிகள் மற்றும் பயிற்சியாளர்களை வைத்து உலகக்கோப்பைக்கு தயாரானதாக ரூதர்போர்டு தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த வாய்ப்புக்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் ஐ.பி.எல் தொடரில் நான் 2 மாதங்கள் இருந்தேன். அங்கே வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்த தொடருக்காக நான் தயாரானேன். போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்வதே திட்டமாகும். நானும் டேரன் சமியும் பேசினோம். எதிரணியில் கடைசி 2 ஓவர்களை வீசுவதற்கு தரமான பவுலர்கள் இல்லை என்பதை பார்த்தேன். அதனால் கடைசி வரை விளையாடினால் அங்கே நம்மால் பெரிய ரன்கள் குவிக்க முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அந்த ஓவர்களை அதிகமாக பயன்படுத்த விரும்பினேன். அந்த திட்டத்தை பின்பற்றிய நான் சரியாக செய்தேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்