3வது ஒருநாள் போட்டி; ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெறுகிறது.;

Update: 2024-11-11 09:53 GMT

Image Courtesy: @ACBofficials

ஷார்ஜா,

ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானும், 2வது போட்டியில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக வங்காளதேச கேப்டன் ஷாண்டோ ஆடவில்லை. அவருக்கு பதிலாக வங்காளதேச அணியை மெஹதி ஹசன் மிராஸ் வழிநடத்துகிறார். இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்