2வது டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.;

Update: 2024-09-14 00:17 GMT

Image : England Cricket

கார்டிப்,

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 14 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.முதல் விக்கெட்டுக்கு மேத்யூ ஷாட்-ஹெட் ஜோடி 52 ரன்களை சேர்த்தது. ஷாட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.அடுத்து ஜேக் பிரேசர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியில், ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 193 ரன்கள் குவித்தது.இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், பிரிடோன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பில் சால்ட் 23 பந்தில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.பொறுப்புடன் ஆடிய லிவிங்ஸ்டோன் அரை சதமடித்தார். அவர் 47 பந்தில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜேக்கப் பெத்தேல் 44 ரன்கள் சேர்த்தார்.இறுதியில் இங்கிலாந்து 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. , டி20 தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்