பிளாஸ்டிக் இல்லாத 'லாச்சுங்'

Update: 2023-09-01 03:54 GMT

சிக்கிம் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருக்கும் மலைப்பிரதேசம் லாச்சுங். கடல் மட்டத்திலிருந்து 9,600 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்தச் சிறிய ஊர். அழகழகான குன்றுகள், பசும்புல்வெளிகள் என கண்ணுக்குக் குளிர்ச்சியான இடங்கள் இங்கே ஏராளம். இதைஎல்லாம் விட இந்த ஊருக்கான தனிச்சிறப்பே பிளாஸ்டிக் தடை.

குறிப்பாக விலைக்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களை ஊருக்குள் எடுத்துச் செல்லவே முடியாது. மீறி எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம். தவிர, எந்த வகையான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் அனுமதி இல்லை. பொதுவாக, எல்லா நாடுகளிலும் தடை என்பது வெறும் கண்துடைப்பாக மட்டுமே இருக்கும். கொஞ்ச நாட்கள் கழித்து தடை விதிக்கப்பட்ட பொருள் மறுபடியும் பயன்பாட்டுக்கு வந்துவிடும். ஆனால், லாச்சுங்வாசிகள் தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்கி இருக்கின்றனர். அதனாலேயே இன்று இந்தியாவில் பிளாஸ்டிக் பாட்டில் இல்லாத ஒரே ஊராக மிளிர்கிறது லாச்சுங்.

Tags:    

மேலும் செய்திகள்