துணிச்சலான 'தேன்வளைக் கரடி'

‘ஹனி பேட்ஜர்’ என அழைக்கப்படும், தேன்வளைக் கரடி, ‘எதற்குமே பயப்படாத விலங்கு’ என்று பெயர் பெற்றது.

Update: 2023-09-01 03:40 GMT

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்திய துணைக்கண்டத்திலும் காணப்படும். இந்தக் கரடி, 2.5 அடி நீளமும், ஒரு அடி உயரமும் கொண்டது. இதற்கு ஒரு அடி நீளமுள்ள புசுபுசு வாலும் உண்டு.

இது மர நாய் குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டி. இந்த பயங்கர விலங்கிற்கு வலிமையான தாடைகளும், கூர்மையான பற்களும், நகங்களும் உண்டு. ஆமை ஓட்டையே உடைத்து விடக் கூடிய வல்லமை வாய்ந்தது.

இதை அனைத்துண்ணி என்பார்கள். தேன், தேனீ லார்வா, கிழங்கு, வேர்கள், பழங்கள், தேள், பாம்பு, ஆமை, சிறு மான், தவளை, முதலைக் குட்டி, பூச்சிகள், முள்ளம்பன்றி, பறவைகள் என்று அனைத்தையும் உண்ணும்.

கடும் விஷம் கொண்ட நல்ல பாம்பைக் கூட கொன்று தின்னும். இரையின் எலும்பு, முடி, இறகு, தசை என்று ஒன்று விடாமல் சாப்பிடும். இருப்பினும் தேனை விரும்பி உண்ணும். மேலும் தரையில் வளை தோண்டி, அதில் குட்டி போட்டு வாழும். எனவே தான் 'தேன்வளைக் கரடி' என்று அழைக்கப்படுகிறது.

இதன் தோல் மிகக் கடினமாக ரப்பர் போன்று இருக்கும். அம்பு, ஈட்டி போன்றவை அதை துளைக்காது. அரிவாளால் வெட்டினால் அதன் மேல் சிறு கீறல் கூட விழாது. தேனீ கொட்டினாலும் இதனால் உணர முடியாது. எதிரி விலங்கு இதைப் பிடித்தால், தன் தோலைச் சுழற்றித் திருப்பி, எதிரியுடன் ஆக்ரோஷமாக மோத ஆரம்பித்து கண்களைக் குறி வைத்துத் தாக்கும். தன்னை விட, ஆக்ரோஷமாக, எதிரி தாக்கினால் நாற்றம் மிகுந்த காற்றை வெளியேற்றும் குணமுடையது. இரை தின்னும் சிங்கத்தை விரட்டி விட்டு, அந்த இரையை உண்ணும் அளவிற்கு தைரியம் கொண்டது. இதன் நடை வித்தியாசமாக இருக்கும். குதிரையைப் போல் துள்ளி ஓடும்.

இதன் கர்ப்பகாலம் ஆறு முதல் எட்டு வாரங்கள். ஒரு பிரசவத்தில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் போடும். குட்டி பிறந்து 16 மாதங்கள் வரை தாயின் அரவணைப்பில் இருக்கும். பிறகு தனித்து வாழும். இவைகளின் ஆயுட்காலம் சுமார் எட்டு வருடங்கள்.

இதன் தோல் மிகக் கடினமாக ரப்பர் போன்று இருக்கும். அம்பு, ஈட்டி போன்றவை அதை துளைக்காது. அரிவாளால் வெட்டினால் அதன் மேல் சிறு கீறல் கூட விழாது.

Tags:    

மேலும் செய்திகள்