ஓ.டி.டி -யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் "மகாராஜா" திரைப்படம்

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான "மகாராஜா"படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2024-06-27 15:34 GMT

சென்னை,

விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மகாராஜா. இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து இருக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

படத்தில், விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்களின் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், மகாராஜா படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல ஓ.டி.டி தளமான நெட்பிக்ஸ் வாங்கி உள்ளது. எனவே, இப்படம் நெட்பிக்ஸ் தளத்தில் அடுத்த மாதம் 2-ம் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்