தொடர் விடுமுறை எதிரொலி.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

Update: 2024-06-16 00:30 GMT

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். நாளை (திங்கட்கிழமை) வரை விடுமுறை தினமாக இருப்பதால் நேற்று திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்துக் கம்பார்ட்மெண்டுகளிலும் பக்தர்கள் நிரம்பினர். இதுதவிர நாராயணகிரி தோட்டத்தில் உள்ள செட்டுகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் திருமலையில் உள்ள கல்யாண வேதிகா மண்டபம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பக்தர்கள் கூட்டம் கடந்த 13-ந்தேதியில் இருந்தே அதிகரித்து வருவதாகவும், நாளை (திங்கட்கிழமை) இரவு வரை திருமலையில் பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் அன்னப்பிரசாதம், குடிநீர், டீ, காபி ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுகிறது.

கோவிலில் நேற்று முன்தினம் 66 ஆயிரத்து 782 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கல்யாணக்கட்டாவில் 36 ஆயிரத்து 229 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 71 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்