மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார் டொனால்டு டிரம்ப்

Update:2024-11-06 07:01 IST
Live Updates - Page 2
2024-11-06 04:40 GMT

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: யார் முன்னிலை..?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 230 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை (24 மாகாணங்களில் வெற்றி) - (51.4 சதவீதம் வாக்குகள்)

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 192 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார் (15 மாகாணங்களில் வெற்றி) - (47.2 சதவீதம் வாக்குகள்)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை.

2024-11-06 04:19 GMT

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: தற்போதைய முன்னணி நிலவரம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 230 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை (22 மாகாணங்களில் வெற்றி) - (52.1 சதவீதம் வாக்குகள்)

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 179 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார் (11 மாகாணங்களில் வெற்றி) - (46.6 சதவீதம் வாக்குகள்)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை

2024-11-06 04:14 GMT

கலிபோர்னியாவை கைப்பற்றினார் கமலா ஹாரீஸ்

கலிபோர்னியா மாகாணத்தில் கமலா ஹாரீஸ் வெற்றி உறுதி செய்யப்பட்டதால் அவரது பிரதிநிதிகள் எண்ணிக்கை 179 ஆக உயர்ந்துள்ளது டிரம்ப் 214 வாக்குகளும் கமலா ஹாரீஸ் 179 வாக்குகளும் பெற்றுள்ளதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

2024-11-06 03:47 GMT

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்: தற்போதைய முன்னணி நிலவரம்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் மாகாணங்களாக கருதப்படும் பென்சில்வேனியா, நெவாடா, மிஷிகன், விஸ்கான்சின் உள்ளிட்ட மாகாணங்களில் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே வாக்கு எண்ணிக்கை இருந்து வருகிறது

கமலா ஹாரிசின் ஜனநாயக கட்சி வலுவாக உள்ள கலிபோர்னியா,வாஷிங்டன், ஹவாய் உள்ளிட்ட மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது

குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 210 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை (22 மாகாணங்களில் வெற்றி) - ( 52.5 சதவீதம் வாக்குகள்)

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 113 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார் (11 மாகாணங்களில் வெற்றி) - ( 46.3 சதவீதம் வாக்குகள்)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை.

2024-11-06 03:36 GMT

கொலராடோவில் கமலா ஹாரிஸ் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் கொலராடோ மாகாணத்தில் மொத்தம் உள்ள 10 எலக்டோரல் வாக்குகளையும் கமலா ஹாரிஸ் கைப்பற்றியுள்ளார். கொலராடோவில் கமலா ஹாரிஸ் 56 சதவீத வாக்குகளையும், டிரம்ப் 42 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். மீதமுள்ள வாக்குகளை பிற மூன்றாம் தரப்பு கட்சிகளின் வாக்காளர்கள் பெற்றுள்ளனர். 

2024-11-06 03:21 GMT

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: பின்னடைவை சந்திக்கும் கமலா ஹாரிஸ் 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணி தொடங்கி உள்ளது.

குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 198 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை  (52.5 சதவீதம் வாக்குகள்)

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 112 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார்  (46.3 சதவீதம் வாக்குகள்)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை

2024-11-06 03:18 GMT

நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் தேர்தல் முடிவுகளை மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.



 


2024-11-06 03:10 GMT

இலினாய்ஸ் மாகாணத்தில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிப்பெற்றுள்ளார் ராஜா கிருஷ்ணமூர்த்தி.

2024-11-06 03:10 GMT

டெக்சாஸ், புளோரிடா, லூசியானா,அலபாமா, அர்கான்சாஸ், சவுத் கரோலினா என 10க்கும் அதிகமான மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 

2024-11-06 02:30 GMT

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: தற்போதைய நிலவரம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணி தொடங்கி உள்ளது.

குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 178 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை (16 மாகாணங்களில் வெற்றி) - (52 சதவீதம் வாக்குகள்)

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 99 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார் (9 மாகாணங்களில் வெற்றி) - (46 சதவீதம் வாக்குகள்)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை

Tags:    

மேலும் செய்திகள்