சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 95 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
போராட்டம் நடத்திய திமுகவினர் மீது வழக்குப் பதிவு
சென்னை முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 3,500 திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டோரை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் மாஸ்க் கட்டாயம்
தமிழ்நாட்டில் 2 பேருக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில், கர்நாடக எல்லை அருகே நீலகிரி மாவட்டம் இருப்பதால் மாஸ்க் கட்டாயம் என அம்மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.
தி.மு.க.வின் கவர்னர் போராட்டம் பா.ம.க. வழக்கு
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் உரையாற்றாமல் புறப்பட்டு சென்றது நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கவர்னர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், ஆளுங்கட்சி போராட்டம் நடத்த ஒரே நாளில் எப்படி அனுமதியளிக்கப்பட்டது என கேள்வி எழுப்பிய பா.ம.க. இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டில் முறையிட முடிவு செய்யப்பட்டது. இதன்படி அக்கட்சியின் வழக்கறிஞர் கே.பாலு கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து வழக்கு தாக்கல் செய்ய பா.ம.க.வுக்கு, ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளதுடன், மனு தாக்கல் செய்யப்பட்டால், அதுபற்றி நாளை விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் படங்களை இன்று திறந்து வைத்து பேசியுள்ளார்.
துருக்கியில் இருந்து இலங்கை சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்து உள்ளது. 62 பேர் காயமடைந்தனர். இதில், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி; இந்தியாவில் மொத்த பாதிப்பு 7 ஆக உயர்வு
நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் மொத்த பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.
நகரில் ராம்தாஸ்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தைகளை பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர். இதில், பரிசோதனைக்கு பின்னர் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதியாகி உள்ளது.