இந்தியா, நேபாளம், பூடானை தாக்கிய நிலநடுக்கம்; 36 பேர் பலி
திபெத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உள்பட 6 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 38 பேர் காயமடைந்தனர். மேற்கு சீனாவில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலநடுக்கம் இந்தியா, நேபாளம் மற்றும் பூடானில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பை இன்று மதியம் 2 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 வயது முதியவர் ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அதிக தொற்றும் தன்மை கொண்ட எச்5என்1 ரக வைரசின் தாக்குதலுக்கு ஆளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
அமெரிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் பாதிப்புக்கு ஒருவர் பலியாகி உள்ளார் என்று லூசியானா சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. இதனை தொடர்ந்து, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. பீகாரின் முசாபர்பூர், மோதிஹாரி மற்றும் பெட்டையா மாவட்டங்களிலும் உணரப்பட்டது.
இதேபோன்று, திபெத்தின் ஷிகத்சே நகரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.