எல் சால்வடார் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

எல் சால்வடார் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.;

Update:2025-01-10 02:34 IST

சான் சால்வடார்,

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு எல் சால்வடார். இந்நாட்டின் அக்ஜுட்லா நகரை மையமாக கொண்டு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அக்ஜுட்லா நகரில் இருந்து 5 மையில் தொலைவில் 59 மையில் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்