திமுக ஆட்சியில், எதிர்க்கட்சிகளின் ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு அனுமதி இல்லை. திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதியா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.
ஜனவரியில் ஒரு அரிய வானியல் நிகழ்வு
வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய் ஆகிய 4 கோள்களும் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வு வரும் 17,18 ஆகிய தேதிகளில் நிகழவுள்ளது. அதிகாலை நேரத்தில் தொலைநோக்கி மூலம் இந்த கோள்களை காணலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் பூமிக்கு இணையாக ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு 'கிரக அணிவகுப்பு' என அழைக்கப்படுகிறது.
ஜன.11-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஜன.11 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகளை அதிகரிக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்த நிலையில் வரும் 11ம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக போட்டி?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை கமலாலயத்தில் நடைபெறும் மையக்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதி அமல்
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. பிப்.05 தேர்தல் நடைபெறும் நிலையில் மேயர், துணை மேயர் அறைகளை சீலிடும் பணி தொடங்கியது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு 13,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.