தரையிறங்கியபோது தீப்பிடித்து எரிந்த ரஷிய விமானம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

துருக்கியின் அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்தது.;

Update: 2024-11-25 07:53 GMT

இஸ்தான்புல்:

ரஷியாவின் ரிசார்ட் நகரமான சோச்சியில் இருந்து துருக்கியின் அந்தாலியா விமான நிலையத்திற்கு அஜிமுத் ஏர்லைன்சின் பயணிகள் விமானம் வந்தது. சுகோய் சூப்பர்ஜெட் 100 வகையை சேர்ந்த அந்த விமானத்தில் 89 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணித்தனர்.

விமானம் அந்தாலியா விமான நிலையத்தில் நேற்று மாலையில் தரையிறங்கியபோது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினர்.

விமானம் தரையிறங்கியதும் விமானி அவசர அழைப்பு கொடுக்க, விமான நிலைய மீட்புக்குழு, தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி என்ஜினை குளிர்வித்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த விபத்தைத் தொடர்ந்து ஓடுபாதையில் இருந்து விமானத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக, விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்