ரஷியாவில் புதிய சுற்றுலா வரி அமல்
ரஷியாவில் புதிய சுற்றுலா வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.;
மாஸ்கோ,
ரஷியாவில் சுற்றுலா துறையை கட்டமைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகள் தங்கும் ஓட்டல்கள் மற்றும் பிற தங்கும் விடுதிகளில் அவர்கள் தங்குவதற்காக கூடுதலாக 1 சதவீத வரி விதிக்கப்படும்.
2024-ம் ஆண்டு ஜூலையில் ரஷிய வரி குறியீட்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சுற்றுலா தொழிற்சாலைகளாக வளர்ந்து வரும் அல்லது முன்பே வளர்ந்த பல பகுதிகளில் இந்த நடைமுறை முன்பே கொண்டு வரப்பட்டு விட்டது.
இதன்படி, சுற்றுலா கட்டமைப்பை மண்டல ரீதியாக வளர்க்கும் திட்ட தொடக்கத்தின்படி, 2025-ம் ஆண்டில் 1 சதவீதம் என்ற விகிதத்தில் சுற்றுலா வரி விதிப்பு தொடங்கும். இது தொடர்ந்து அதிகரித்து, 2027-ம் ஆண்டில் 3 சதவீதம் என்ற அளவுக்கு உயரும்.
ஓட்டல்கள் மற்றும் பிற தங்கும் வசதிகளை வழங்குபவர்கள் வரி செலுத்துபவர்களாக உள்ள சூழலில், தொகையானது தங்குவதற்கான விலையுடன் சேர்க்கப்படுகிறது. அதனால், அந்த பணம் சுற்றுலாவாசிகள் செலுத்தும்படி ஆகிறது.