போராட்டத்தை தூண்டிவிட்டதாக இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
போராட்டத்தை துண்டிவிட்டதாக பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 'தோஷ்கானா' வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாகிஸ்தான் கோர்ட்டு அவரை சிறையில் அடைத்தது. மேலும் அவர் நிறுவிய பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சிக்கு நாடு தழுவிய தடை விதிக்கப்பட்டது.
சிறையில் உள்ள இம்ரான்கானை விடுவிக்க வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட நாட்டின் முக்கிய நகரங்கள் முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். சிலநாட்களுக்கு முன்னர் நடந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தனது சமூக ஊடகப் பதிவுகள் மூலம் அரசாங்க அதிகாரிகளை கலகத்திற்கு தூண்டியதற்காகவும், 'தேசத்துரோக' செயலில் ஈடுபட்டதற்காகவும் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.